டெல்லியில் ஆண்டுதோறும் குளிர்காலத்தின்போது காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்படும். இந்தாண்டின் குளிர்கால தொடக்கத்திலேயே காற்று மிகவும் மாசுபட்டுள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ( Central Pollution Control Board - CPCB ) தெரிவித்துள்ளது.
காற்றின் தரக்குறியீடு 50 வரை இருந்தால் மட்டுமே அது நல்ல நிலை. 51-100 இருந்தால் அது திருப்திகரமானது, 101-200 இருந்தால் மிதமானது, 201- 300 இருப்பது மோசமான நிலை, 301-400 மிகவும் மோசமான நிலை, 401-500 கடுமையானது எனக் கருதப்படுகிறது.
காற்று மாசு
டெல்லியில் கடந்த சில நாள்களாகவே காற்றின் தரம் மோசமாக இருந்து வருகிறது. நேற்றைய முன் தினத்தின் (நவ.03) நிலவரப்படி காற்றின் தரக்குறியீடு மிகவும் மோசமான நிலையான 330ஆக இருந்தது.
நேற்று (நவ.04) காலை 8 மணி நிலவரப்படி காற்று மாசு அளவு 341ஆக பதிவாகியுள்ளது. காற்று மாசு சராசரியாக 303 என்கிற அளவில் பதிவாகியுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.