தமிழ்நாடு

tamil nadu

அரியானா: கிராமத் தலைவராக உயிரிழந்தவர் தேர்வானதால் அதிர்ச்சி..

By

Published : Nov 15, 2022, 7:10 AM IST

அரியானாவில் உயிரிழந்த ஒருவர் கிராமத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா
அரியானா

அரியானா:குருக்‌ஷேசத்திரம் அடுத்த ஜனாதேதி கிராமத்தில் பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. கிராமத் தலைவர் பதவிக்கு 3 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அதில் ஒருவரான ராஜ்பீர், வாக்குப்பதிவுக்கு ஒரு வாரத்திற்கு முன் மூளையில் அதிகளவில் ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார்.

ராஜ்பீர் உயிரிழந்ததை மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தப்படவில்லை என கூறப்படுகிறது. வேட்பாளர் பட்டியலில் இருந்து ராஜ்பீர் பெயர் நீக்கப்படவில்லை. தேர்தலும் நடைபெற்ற நிலையில், மொத்தமாக ஆயிரத்து 790 பேர் வாக்களித்தனர்.

வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில் ஆயிரத்து 660 வாக்குகள் பெற்று ராஜ்பீர் அமோக வெற்றி பெற்றார். ராஜ்பீர் மீது கொண்ட நம்பிக்கை மற்றும் அனுதாபத்தால் ஊர் மக்கள் ஒன்றிணைந்து அவரை வெற்றி பெறச் செய்துள்ளனர்.

வெற்றியாளர் உயிரிழந்தது குறித்து மாநில தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு அடுத்த 6 மாதத்திற்குள் மீண்டும் தேர்தல் நடத்த ஆணையம் உத்தரவிட்டது. அதேநேரம் அடுத்த ஒரு தேர்தல் வந்தாலும் கிராம மக்கள் ஒன்றுகூடி உயிரிழந்த ராஜ்பீரின் மனைவியை கிராமத் தலைவர் பதவிக்கு நியமிக்க முடிவு எடுக்க உள்ளதாக ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்கள்:தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா மரணம்

ABOUT THE AUTHOR

...view details