தமிழ்நாடு

tamil nadu

நாடாளுமன்ற வரலாற்றில் இதுபோன்ற மோதலை பார்த்ததில்லை - மாயாவதி

By

Published : Aug 12, 2021, 6:57 PM IST

நாடாளுமன்றத்தில் அரங்கேறிய மோதல் போக்கு குறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வருத்தம் தெரிவித்துள்ளார்.

Mayawati
Mayawati

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் மோதல் குறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ட்விட்டரில் கவலை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், "நாட்டின் நாடளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அரசு-எதிர்க்கட்சியினருக்கு இடையே அரங்கேறிய மோதல் மிகவும் வருந்தத்தக்கது.

எனது நீண்ட நாடாளுமன்ற வாழ்வில் நீண்ட மோதல், போராட்டங்கள் பலவற்றை கண்டுள்ளேன். ஆனால் இதுபோன்ற காட்சிகளை நான் இதுவரை கண்டதில்லை" எனக் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இரு அவைகளையும் முடக்கின. பெகாசஸ், வேளாண் சட்டம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை கையிலெடுத்து தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக மக்களவை இரு நாள்களுக்கு முன்தாகவே காலவரையன்றி ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க:நானும் ராகுல் தான் - ட்விட்டருக்கு சாவல் விடும் காங்கிரஸ்

ABOUT THE AUTHOR

...view details