ETV Bharat / bharat

நானும் ராகுல் தான் - ட்விட்டருக்கு சாவல் விடும் காங்கிரஸ்

author img

By

Published : Aug 12, 2021, 4:55 PM IST

ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இளைஞர் காங்கிரஸ் தனது ட்விட்டர் கணக்கை ராகுலின் பெயரில் மாற்றிவருகின்றன.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு சில நாள்களுக்கு முன்னர் அந்நிறுவனத்தால் முடக்கப்பட்டது.

டெல்லியில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரைக் கடந்த வாரம் சந்தித்த ராகுல் காந்தி, அந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டார்.

ராகுல் கணக்கு முடக்கம்

பாலியல் வழக்கு விதிமுறையை மீறி, ராகுல் காந்தி பாதிக்கப்பட்டவரின் உறவினரின் படத்தை பதிவிட்டதாகக் கூறி, ராகுலின் ட்விட்டர் கணக்கை, அந்நிறுவனம் முடக்கியது.

இந்நிலையில் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட பின்னர் மாணிக்கம் தாகூர், ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, ஜிதேந்திரா சிங் உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்களின் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. அத்துடன் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ கணக்கும் இன்று முடக்கப்பட்டது.

  • Action taken against a prominent Opposition leader raises obvious concerns of selectivity&bias. I urge @Twitter to restore @RahulGandhi’s account, review the policy of automatic suspensions & show more sensitivity to public concerns. Focus on what happened to the girl, not a pic!

    — Shashi Tharoor (@ShashiTharoor) August 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

நானும் ராகுல் தான்

ராகுல் காந்தி மீதான ட்விட்டரின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும், அவருக்கு உறுதுணையுடன் நிற்பதைப் பிரதிபலிக்கும் விதமாகவும், இந்திய இளைஞர் காங்கிரஸ் தனது ட்விட்டர் கணக்கின் பெயரை ராகுல் காந்தி என்று மாற்றியுள்ளது.

ராகுல் காந்தியின் புகைப்படத்தை புரோஃபைல் போட்டோவாக வைத்து, 'நானும் ராகுல் தான்' என ட்வீட் செய்துள்ளது.

இதைத்தொடர்ந்து பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும், காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பிரிவுகளும் தங்களின் ட்விட்டர் கணக்குகளின் பெயர்களை ராகுல் காந்தி என மாற்றி, அதன் புரோஃபைல் புகைப்படங்களாக ராகுல் காந்தியின் படத்தை வைக்கத் தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: ’60% மக்களின் குரல் ஒடுக்கப்படுகிறது’ - எதிர்க்கட்சிகள் பேரணியில் ராகுல் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.