தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவோவாக்ஸ் தடுப்பூசியை யார் எல்லாம் செலுத்திக்கொள்ளலாம்? - சீரம் நிறுவனம் விளக்கம்

12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கோவோவாக்ஸ் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என சீரம் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.

சீரம் நிறுவனம் விளக்கம்
சீரம் நிறுவனம் விளக்கம்

By

Published : May 5, 2022, 2:18 PM IST

புனே (மகாராஷ்டிரா): கரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்க பெரியவர்கள் முதல் சிறார்கள் வரை அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயது மேற்பட்டவர்களுக்கு பாரத் பயோடெக்கின் கோவாக்சின், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஆகியவை செலுத்தப்படுகிறது.

15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிலையில், 12 முதல் 17 வயது சிறார்களுக்காக சீரம் நிறுவனம் தயாரித்த கோவோவாக்ஸ் ( Covovax) கரோனா தடுப்பூசிக்கு கடந்த வாரம், நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், பெரியவர்களும் கோவோவாக்ஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா எனக் கேள்வி எழுந்தது. இதையடுத்து, நேற்று (மே 4) சீரம் நிறுவன சிஇஓ அதார் பூனாவல்லா இதற்கு விளக்கம் அளித்து ட்விட்டர் பதிவிட்டுள்ளார். அதில், " 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவோவாக்ஸ் தடுப்பூசி கிடைக்கும். 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கோவோவாக்ஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கோவோவாக்ஸ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரே தடுப்பூசி ஆகும். ஐரோப்பாவிலும் விற்பனை செய்யப்படுகிறது. இது 90 சதவீதம் செயல்திறன் கொண்டது ஆகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த வாரம் 12 முதல் 17 வயதினருக்கு கோவோவாக்ஸ் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் செலுத்திக் கொள்ளலாம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில், ஒன்றிய அரசு கோவோவாக்ஸ் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்காக அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி யாரையும் வற்புறுத்த முடியாது - உச்சநீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details