தமிழ்நாடு

tamil nadu

ஊனமுற்றவர்களைக் கேலி செய்த லால் சிங் சத்தா - காவல் ஆணையத்திடம் புகார்

By

Published : Aug 24, 2022, 11:54 AM IST

Updated : Aug 24, 2022, 3:19 PM IST

மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக டாக்டர் சதேந்திர சிங் ‘லால் சிங் சத்தா’ மற்றும் "ஷபாஷ் மிது" படத்தின் மீது புகார் அளித்துள்ளார்.

Etv Bharatஊனமுற்றுவர்களை அவமானப்படுத்திய லால் சிங் சத்தா - காவல் ஆணையத்திடம் புகார்
Etv Bharatஊனமுற்றுவர்களை அவமானப்படுத்திய லால் சிங் சத்தா - காவல் ஆணையத்திடம் புகார்

டெல்லி:பாலிவுட் படங்களான "லால் சிங் சதா" மற்றும் "ஷபாஷ் மிது" ஆகியப்படங்களுக்கு எதிராக மாற்றுத்திறனாளிகளை கேலி செய்ததாக மாற்றுத்திறனாளிகள் ஆணையர் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஊனமுற்றோர் மருத்துவர் சங்கத்தின் இணை நிறுவனர், டாக்டர் சதேந்திர சிங் இது குறித்துப் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் கமிஷனர் நீதிமன்றம் வழங்கிய நோட்டீஸின் நகலைப் பகிர்ந்துள்ளார்.

இருப்பினும், சமூக நீதி அமைச்சகத்திடம் இருந்து இந்த விவகாரம் குறித்து இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை. இவர் பகிர்ந்துள்ள நோட்டீஸின் படி, மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையர் நீதிமன்றம், "லால் சிங் சத்தா" மற்றும் "ஷபாஷ் மிது" படங்களின் இயக்குநர்களிடமிருந்து விளக்கம் கேட்டுள்ளது.

மேலும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) மற்றும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திடம் இந்த விவகாரம் குறித்து கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம், 2016 இன் விதிகளின் படி மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான இழிவான கருத்துகள் இடம்பெற்றிருப்பதன் மூலம் திரைப்படங்கள் விதிகளை மீறுவதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பஞ்சாப்பில் ரூ.660 கோடி மதிப்பில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம்... ஆகஸ்ட் 24ஆம் தேதி பிரதமர் திறந்து வைப்பு...

Last Updated : Aug 24, 2022, 3:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details