தமிழ்நாடு

tamil nadu

'நாட்டின் இந்த நிலைக்கு பிரதமர் மோடியே காரணம்' : ராகுல் தாக்கு

By

Published : Jun 19, 2022, 7:37 PM IST

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

ராகுல் தாக்கு
ராகுல் தாக்கு

டெல்லி:ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 'அக்னிபத்' திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பும், போராட்டமும் கிளம்பியுள்ளது. சில மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடத்துள்ளன. ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கும் இத்திட்டத்திற்கு இளைஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் இத்திட்டத்திற்கு எதிராக குரல் எழுப்புகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்கள் பிரியங்கா காந்தி, சச்சின் பைலட் உள்ளிட்டவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இன்று (ஜூன் 19) போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர், வேலை வாய்ப்பு குறித்த தவறான நம்பிக்கையை மீண்டும் மீண்டும் கொடுத்து, தற்போது அக்னிபத் என்ற வேலையில்லா திண்டாட்டத்திற்கு இளைஞர்களை கட்டாயப்படுத்துகிறார்.

இந்த 8 ஆண்டுகளில் 16 கோடி வேலைவாய்ப்புகள் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல் இளைஞர்களுக்கு பக்கோடா செய்வது குறித்த அறிவு மட்டுமே கிடைத்துள்ளது" என்று அவர் விமர்சித்துள்ளார்.

முன்னதாக ராகுல் காந்தி இன்று (ஜூன் 19) தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். தெருக்களில் இறங்கி இளைஞர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் துணை நிற்க வேண்டும் என்று கூறினார்.

இதையும் படிங்க: "ஆரோக்கியமான வாழ்க்கைக்காக அனைவரும் யோகா பயிற்சி செய்யுங்கள்" - பிரதமர் மோடி!

ABOUT THE AUTHOR

...view details