ETV Bharat / bharat

"ஆரோக்கியமான வாழ்க்கைக்காக அனைவரும் யோகா பயிற்சி செய்யுங்கள்" - பிரதமர் மோடி!

author img

By

Published : Jun 19, 2022, 6:00 PM IST

ஆரோக்கியமான வாழ்க்கைக்காக நாட்டு மக்கள் அனைவரும் யோகா பயிற்சி செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

pm modi
PM Modi

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இளைஞர்களிடையே வாழ்வியல் முறை சார்ந்த நோய்கள் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் யோகா பயிற்சியின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்து வருகிறது.

நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்காக அனைவரும் யோகா பயிற்சி செய்யுங்கள்" என்று தெரிவித்துள்ளார். யோகா பயிற்சி தொடர்பான வீடியோ ஒன்றையும் அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

  • தொற்றா நோய்களும் வாழ்க்கை முறை சிக்கல்களால் ஏற்படும் உடல்நல சீர்கேடுகளும் , குறிப்பாக இளம் வயதினரிடையே பெருகி வரும் தற்காலச் சூழலில் , யோகா கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. சிறந்த ஆரோக்கியத்திற்கும் நலனுக்கும் யோகா பயிற்சியை மேற்கொள்ளுங்கள். https://t.co/UESTuNybNm

    — Narendra Modi (@narendramodi) June 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

வரும் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மைசூரில் பிரதமர் மோடி தலைமையில் யோகா தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இதையும் படிங்க:அக்னிபத் திட்ட விவரங்களை வெளியிட்ட இந்திய விமானப்படை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.