தமிழ்நாடு

tamil nadu

இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற பாக். ட்ரோன்.. சுட்டு வீழ்த்திய ராணுவ வீரர்கள்...

By

Published : Nov 29, 2022, 10:43 AM IST

அமிர்தசரஸ் பகுதியில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ட்ரோனை இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

பாகிஸ்தான் ட்ரோன்
பாகிஸ்தான் ட்ரோன்

அமிர்தசரஸ் (பஞ்சாப்): பஞ்சாப், அமிர்தசரஸ் சர்வதேச எல்லைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட எல்லை பாதுகாப்பு படையினர், பாகிஸ்தானில் இருந்து இந்திய பகுதிக்குள் ட்ரோன் நுழைவதை கண்டனர்.

அமிர்தசரஸ் மாவட்டத்தின் சாஹார்புர் பகுதிக்குள் நூழைய முயன்ற ட்ரோனை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். ட்ரோன் நுழைய முயன்ற பகுதியை சுற்றிவளைத்த வீரர்கள், தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சோதனையில் 6 பிளேடு கொண்ட ரிமோட் கண்ட்ரோல் வகையில் ஹெக்சாகாப்டர் ட்ரோன் கைப்பற்றப்பட்டதாக ராணுவ வீரர்கள் தெரிவித்தனர். சேதமான ட்ரோனுடன் பாலித்தீன் பையில் இருந்த மர்ம பொருளையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதாக எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:கோவை குண்டுவெடிப்பு வழக்கு; இருவர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details