தமிழ்நாடு

tamil nadu

திரிபுராவில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு... பாதுகாப்பு படை வீரர் வீரமரணம்

By

Published : Aug 20, 2022, 8:13 AM IST

திரிபுராவில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், நான்கு குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாதுகாப்பு படை வீரர் வீரமரணம்
பாதுகாப்பு படை வீரர் வீரமரணம்

அகர்தலா: திரிபுரா மாநிலத்தின் வடக்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள அனந்தபஜார் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில்கீழ் வரும் சிம்னாபூர் சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் சிலர் நேற்று (ஆக. 19) காலை 8.30 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலை திரிப்புரா தேசிய விடுதலை முன்னணி (NLFT) என்னும் தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து உளவுத்துறை அதிகாரி ஒருவர், ஈடிவி பாரத் ஊடகத்திடம் கூறும்போது,"திரிப்புராவின் சிம்னாபூர் எல்லை சோதனைச்சாவடியில் வழக்கம்போல், பாதுக்காப்பு படை வீரர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தனர். அப்போது, திடீரென NLFT பயங்கரவாதிகள் சிலர், அங்கிருந்த வேலிக்கு மறுபுறத்தில் இருந்து, படை வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

தற்காப்புக்காக படை வீரர்களும் எதிர் தாக்குதல் தொடுத்தனர். அதில், துரதிஷ்டவசமாக, 145ஆவது பட்டாலியனை சேர்ந்த தலைமை காவலர் கிரிஜேஷ் குமார் உயிரிழந்தார். நான்கு குண்டுகள் பாய்ந்ததில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் அகர்தலா கொண்டு சென்றோம். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடலை உடற்கூராய்வுக்காக அகர்தலாவில் உள்ள ஜீபி பந்த் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம்" என்றார்.

மேலும், பாதுகாப்பு படையினரின் தொடர் தாக்குதலால், பயங்கரவாதிகள் வங்கதேசத்தின் அடர்ந்த வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலை தொடர்ந்து, மூத்த காவல் துறை அதிகாரிகள், எல்லை பாதுகாப்பு படையின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

இதையும் படிங்க:படிப்பில் கவனம் செலுத்தாத மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை

ABOUT THE AUTHOR

...view details