ETV Bharat / bharat

படிப்பில் கவனம் செலுத்தாத மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை

author img

By

Published : Aug 19, 2022, 11:05 PM IST

குஜராத்தில் படிப்பில் கவனம் செலுத்தாமல் மொபைலில் கேம் விளையாடுவதிலேயே ஆர்வமாக இருந்த மகனை தந்தை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

Retired army man Fired on his son Due to usage of more mobile instead of studies
Retired army man Fired on his son Due to usage of more mobile instead of studies

குஜராத்: சூரத் மாவட்டதில் உள்ள காம்ரேஜ் தாலுகா , வாவ் கிராமத்தில் வசித்து வந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான தர்மேந்திர ஓம்பிரகாஷ் சகியா. இவரது மகனான பிரின்ஸ் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தந்தைக்கும் மகனுக்கும் படிப்பு தொடர்பாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. தந்தை ஓம்பிரகாஷ் சகியா படிக்க சொல்லும் போதெல்லாம் , மகன் பிரின்ஸ் மொபைல் போனில் கேம் விளையாடுவதிலும் , அதை பயன்படுத்துவதில் மட்டுமே ஆர்வமாக இருந்துள்ளார்.

மீண்டும் இருவருக்கும் இடையே பிரச்சனை வந்த போது , முதலில் மகன் தந்தையை தலையில் அடித்துள்ளார். கோபமடைந்த தந்தை துப்பாக்கியால் மகனை இருமுறை சுட்டுள்ளார். இதில் பிரின்ஸ் காயம் அடைந்தார். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு அக்கம்பகத்தினர் ஓம்பிரகாஷ் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர்.

காயமடைந்து காணப்பட்ட பிரின்ஸை , மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் ஓம்பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரியாணியால் பிரச்னை... போதையில் கஷ்டமரை கத்தியால் குத்திய கடைக்காரர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.