தமிழ்நாடு

tamil nadu

12 பேரை கொன்ற வெயில், பீகாரில் பல இடங்களில் RED ALERT!

By

Published : Jun 18, 2023, 6:47 AM IST

பீகார் மாநிலத்தின் அவுரங்காபாத், ரோஹ்டாஸ், போஜ்பூர், பக்சர், கைமூர், அர்வல் ஆகிய பகுதிகளுக்கு red alert எச்சரிக்கையும், பாட்னாவின் தெற்கு பகுதிகள் orange alert எச்சரிக்கையும். மேலும், பெகுசராய் மற்றும் அதனை சுற்றியுள்ள ஐந்து பகுதிகளுக்கு yellow alert எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.

heat stroke in bihar
பீகார் வெயில்

பாட்னா:கடந்த 24 மணிநேரத்தில் கிட்டத்தட்ட 12 நபர்கள் அதிக வெப்ப அலையால் பீகாரில் இறந்துள்ளனர். வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வரும் ஞாயிறு வரை பீகாரின் தென்மேற்குப் பகுதியில் உள்ள 6 மாவட்டங்களுக்கு red alert என்றும், 12 தென் மாவட்டங்களுக்கு orange alert என்றும், மேலும் மற்ற 9 இடங்களுக்கு yellow alert என்றும் மாவட்ட வாணிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதிகப் படியான வெப்ப நிலையாக ஷேக்புராவில் 44.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. மேலும் பாட்னா பகுதிகளில் கடந்த 44 மணி நேரத்தில் சராசரி வெப்ப நிலையாக 43.6 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரித்துள்ளது. அவுரங்காபாத், ரோஹ்தாஸ், போஜ்பூர், பக்சர், கைமூர், அர்வல் ஆகிய மாவட்டங்கள் red alert பகுதிகளாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பாட்னா, பெகுசராய், காகாரியா, நாலந்தா, பன்கா, ஷேக்புரா, ஜமுயி, லக்கிசரை ஆகிய மாவட்டங்கள் orange alert பகுதிகளாகவும்; மேலும் கிழக்கு சம்பரன், காயா, பாகல்பூர், ஜெகனாபாத் ஆகிய மாவட்டங்கள் yellow alert பகுதிகளாகவும் மாநில வானிலை ஆய்வு நிலையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெயிலின் வெப்பத்தால் இறந்த 12 நபர்களில் ஆறு பேர் போஜ்பூர் மாவட்டத்திலும், இருவர் ரோஹ்தாஸ் மாவட்டத்திலும் மேலும் நாலந்தா, ஜமுயி, காயா, பாட்னா மாவட்டத்திலும் தலா ஒருவரும் அதிக வெயிலின் தாக்கத்தினால் மரணம் அடைந்துள்ளனர். இதுகுறித்து வானிலை அதிகாரிகள் கூறுகையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வெப்பம் குறைவதற்கான வாய்ப்பில்லை என்றும், பொதுமக்கள் யாரும் நெடுநேரம் வெயிலில் இருக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளது. அதிக வெப்பத்திலிருந்து தற்காக்கும் வகையில், மாவட்ட தலைமை நீதிபதி சந்திரஷேகர் சிங் அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளை ஜூன் 24ஆம் தேதி வரை விடுமுறை அளிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 20ஆம் தேதி திறக்கப்படவிருந்த நிலையில், தற்போது நிலவும் அதிக வெப்பத்தின் காரணமாக மாவட்ட நிர்வாகம் ஜூன் 24ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின் படி, அடுத்த இரண்டு நாட்களுக்கு மத்திய பீகார் பகுதிகளில் காற்று 20 முதல் 30 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும்; அதிகப்படியாக 40 கி.மீ., வேகம் வரை காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் வெப்ப நிலை 48 முதல் 50 டிகிரி செல்சியஸ் செல்லக்கூடும் என்றும்; தற்போது உள்ள வெப்பமான பருவத்தால் ஹீட் ஸ்ட்ரொக் போன்ற வெயிலினால் ஏற்படும் பாதிப்புகள் நேரக்கூடும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க:வெயிலால் ஹீட் ஸ்ட்ரோக் அபாயம்.. பீர் வேண்டாம் மோர் குடிங்க.. மருத்துவர்கள் கூறும் சம்மர் டிப்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details