தமிழ்நாடு

tamil nadu

கரோனா வைரஸ் களப்பணியாளர்களைப் பாராட்டிய பிரதமர் மோடி!

By

Published : May 7, 2020, 9:21 PM IST

டெல்லி: கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்திற்குத் தலைமை தாங்கும் களப்பணியாளர்களை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.

ே்
ே்ே்

உலகெங்கிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர், அதை எதிர்த்து போராடுவோரைக் கவுரவப்படுத்தும் விதமாக, புத்த பூர்ணிமா விழா இன்று கொண்டாடப்பட்டது. இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட காணொலியில், " இந்த கடினமான காலங்களில் மற்றவர்களுக்காக மக்கள் தன்னலமின்றி உழைப்பது பாராட்டுக்குரியது.

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஏற்படும் பிரச்னைகளை எதிர்கொள்பவர்களுடன் இந்தியா உறுதியோடு துணை நிற்கிறது. இந்தியாவின் வளர்ச்சி எப்போதும் உலகளாவிய வளர்ச்சிக்கு உதவும். போராட்டத்தில் மக்கள் சோர்வடைந்து நிற்பது பிரச்சனைக்கு ஒரு தீர்வாக இருக்க முடியாது.

கரோனா வைரசைத் தோற்கடிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் " என்றார்.

இதையும் படிங்க:விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு: நிலைமையை கண்காணித்து வருகிறோம் - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details