தமிழ்நாடு

tamil nadu

'புதினுடன் மோத முடிவெடுத்த சவூதி அரேபியா'- எண்ணெய் போரின் கதை!

By

Published : Mar 27, 2020, 11:59 PM IST

பெட்ரோல், டீசல், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எண்ணெய் வளங்களை வைத்திருந்து ஏற்றுமதி செய்யும் நாடுகள் நீண்ட காலமாக அவற்றின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியைக் குறைப்பது அல்லது அதிகரிப்பதன் மூலம் விலைகளைக் கையாள முடிந்தது. அதன் விளைவாக இந்த நாடுகள் உலகப் பொருளாதாரத்திலும் இதைச் சுற்றியுள்ள புவிசார் அரசியலிலும் தனது செல்வாக்கைக் கொண்டுள்ளன. ஒரு கட்டத்தில் சவூதி அரேபியா, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் நேருக்கு நேர் மோதவும் முடிவெடுத்தது. இந்தப் போரை பற்றி விவரிக்கிறது இச்செய்தித் தொகுப்பு.

The Game Changer for Energy Cartels: The Russia Saudi Arabia Oil Price War  Energy Cartels The Russia Saudi Arabia Oil Price War  சவூதி அரேபியா ரஷியா கச்சா எண்ணெய் போர்  கச்சா எண்ணெய் சண்டை  அமெரிக்க, ரஷிய உறவு  விளாடிமிர் புதின், டொனால்ட் ட்ரம்ப், சவூதி அரேபியா  The Russia Saudi Arabia Oil Price War  எண்ணெய் போரின் கதை
The Game Changer for Energy Cartels: The Russia Saudi Arabia Oil Price War Energy Cartels The Russia Saudi Arabia Oil Price War சவூதி அரேபியா ரஷியா கச்சா எண்ணெய் போர் கச்சா எண்ணெய் சண்டை அமெரிக்க, ரஷிய உறவு விளாடிமிர் புதின், டொனால்ட் ட்ரம்ப், சவூதி அரேபியா The Russia Saudi Arabia Oil Price War எண்ணெய் போரின் கதை

எண்ணெய் சந்தையை ஒழுங்குப்படுத்துவதற்காக, எண்ணெய் உற்பத்தி செய்யும் 15 நாடுகள் ஒன்றிணைந்து ஒபெக் (OPEC) என்ற அமைப்பை 1980ஆம் ஆண்டுகளில் உருவாக்கியது. இந்த அமைப்பில் ரஷியா ஒரு பகுதியாக இல்லை. எனினும் அவர்களின் கூட்டங்களில் கலந்துகொண்டது.

ஒபெக் அமைப்பை பொறுத்தமட்டில், அது சிறந்த ஒத்துழைப்புடன் செயல்பட்டுவருகிறது. இதற்கிடையில் ஷெல் வாயுவை உற்பத்தி செய்யும் முன்னணி நாடுகளான ரஷ்யாவும் அமெரிக்காவும் எண்ணெய் விலையை கையாளுவதில் பெரும் திறன் வகிக்கின்றன.

இந்நிலையில் இந்தாண்டு மார்ச் மாத தொடக்கத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது. குறிப்பாக சீனா, தென் கொரியா போன்ற மற்ற நாடுகளில் எண்ணெய் இறக்குமதி கணிசமாகக் குறைந்தது. இதனால், ஒரு பீப்பாய் 50 டாலருக்கு விற்கப்பட்டது.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

விலை சரிவைத் தடுக்க கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் திட்டத்தை சவூதி அரேபியா முன்மொழிந்தது. ரஷ்ய அதிபர் புதின் இந்த உற்பத்தி குறைப்பை ஏற்க மறுத்து உயர் மட்ட உற்பத்தியைத் தொடர்ந்தார். 1991ஆம் ஆண்டு வளைகுடா போர் காலத்திலும் இதேபோன்று ஒரு நிலை காணப்பட்டது.

இது சவூதி அரேபியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. உலகின் முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடாக தன்னைப் கருதும் சவூதி அரேபியா, புதினுடன் நேருக்கு நேர் மோதலுக்கு முடிவு செய்தது. அவர்கள் கச்சா விலையை குறைத்தது மட்டுமல்லாமல், சவுதி எண்ணெயின் உற்பத்தியையும் அதிகரித்தனர். இது கச்சா எண்ணெய் விலை மேலும் கீழ்நோக்கி ஒரு பீப்பாய் 30 டாலர்களை நெருங்கும் நிலையை ஏற்படுத்தியது.

அப்போது கோல்ட்மேன் சாச்ஸ் ஒரு பீப்பாய் 20 டாலர் வரை விலை குறையக்கூடும் என்று கணித்தார். அப்படியானால் தோற்றவர்கள் யார், வெற்றியாளர்கள் யார்? எண்ணெயிலிருந்து கிடைக்கும் லாபத்தை நம்பியுள்ள ரஷியா ஏன் இத்தகைய ஆபத்தான முடிவை எடுத்தது?

ரஷிய அதிபர் புதின்

புதினின் இத்தகைய எண்ணெய் விளையாட்டுக்கு சில காரணம் உள்ளது. ஒன்று, ரஷியா மிகப்பெரிய பண மற்றும் தங்க இருப்புக்களை உருவாக்கி, 2015 எண்ணெய் உற்பத்தி மற்றும் பின்னடைவிலிருந்து அதன் வரவு செலவுத் திட்டத்தை இறுக்கமாக்கியுள்ளது.

உக்ரேனுடனான மோதல் பிரச்சினையில் மேற்கு நாடுகளால் ரஷியா எதிர்கொண்ட பொருளாதாரத் தடைகள், ரஷியாவை பொருளாதார போருக்கு தயாராக வழிவகுத்தது. இதனால் எண்ணெய் விலை வீழ்ச்சி நினைத்தப்படி அவர்களை பாதிக்கப்போவதில்லை. உண்மையில், அவர்கள் ஒபெக்கில் (OPEC) அரேபியர்களையும் மற்றவர்களையும் தாக்குகிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் எண்ணெய் விலைகள் மீதான ரஷியாவின் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும் சிரியா விவகாரத்தில் சவூதி அரேபியாவின் எதிர்ப்பை அவர்கள் விரும்பவில்லை.

இதுவே ரஷியா அரேபியர்களை காயப்படுத்த காரணம். மேலும் சவூதியின் புவிசார் குறியீட்டை ரஷியா தாக்குகிறது. இரண்டாவதாக, ஷெல் எரிவாயு உயர்வு காரணமாக ஒரு முன்னணி எண்ணெய் உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக அமெரிக்கா, ரஷியா ஆகியவை சவூதியின் சந்தை ஆதிக்கத்துக்கு சவால் விடுகிறது.

சவூதி அரேபிய எண்ணெய் வயல்கள்

மேலும் முக்கிய சந்தைகளை மூடிமறைப்பதன் மூலம் அதன் எண்ணெய் லாபம் மற்றும் விலையை மேம்படுத்த முடியும். ஆனால் இந்த எண்ணெய் விலைப் போரில், அமெரிக்காவும் விலை மற்றும் உற்பத்தி இரண்டையும் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இது அமெரிக்க எண்ணெய் பங்குகள் வீழ்ச்சியடைந்து, ஷெல் நிறுவன தொழிலாளர்களின் பணியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களைப் பற்றி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடரும்பட்சத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு கட்டத்தில் ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவார். இதில் புதினின் மேலாதிக்கம் தெரிகிறது. புதின் இப்போது அமெரிக்காவை திசைதிருப்பும் செய்யும் கைவித்தையை கொண்டுள்ளார்.

அதேநேரத்தில் ஒபெக்கையும் ஓரங்கட்டியுள்ளார். ரஷியாவின் பொருளாதாரத் தடைகளின் கீழ் இருக்கும் வெனிசுலாவுக்கு எண்ணெய் விற்றதிலிருந்து, ரஷியாவின் எண்ணெய் நிறுவனமான ரோஸ் நேபிட் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. இப்போது ரஷியாவின் அழுத்தத்தின் மூலம் அமெரிக்காவுக்கு பதில் கொடுக்க முடிந்தது.

அமெரிக்க அதிபர் ட்ரம்புடன், ரஷிய அதிபர் புதின்

மூன்றாவது ரஷியர்கள் சீன மற்றும் ஐரோப்பா போன்ற எண்ணெய்களுக்கு மிகவும் பாதுகாப்பான சந்தைகளைக் கொண்டுள்ளனர். எனவே அவர்கள் சொல்வது போல் புதின் இவ்வாறு செய்துள்ளார். இதனால் சாதாரண நுகர்வோருக்கு என்ன பயன்? நுகர்வோர் மலிவான எரிவாயு விலையைக் காண வேண்டிய 'தடையற்ற சந்தை வீழ்ச்சி' என்று அழைக்கப்படுவதில் லாபம் ஈட்டப்படுவது போல் தோன்றும்.

ஆனால் இங்குதான் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் வருகின்றன. அமெரிக்கா மற்றும் பிற ஓபெக் நாடுகளின், எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் லாபங்கள் வீழ்ச்சியடைவதால் தங்கள் அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றன.

எனவே அவர்கள் ரஷியா மற்றும் சவூதி அரேபியாவிலிருந்து மலிவான பொருட்களுக்கு எதிராக சுங்கவரி அல்லது உள்ளூர் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு பெரிய அளவில் மானியங்கள் மற்றும் வரி குறைப்புக்களை கோருகின்றனர்

உதாரணமாக, உலகளாவிய கச்சா வீழ்ச்சி இருந்தபோதிலும், இந்திய அரசு கலால் வரிகளை அதிகரித்துள்ளது, எனவே நுகர்வோர் மலிவான பெட்ரோலைப் பெற முடியவில்லை. கரோனா வைரஸ் குறித்த பதற்றம் காரணமாக பணவீக்கம் மற்றும் எண்ணெய் நெருக்கடிகள் குறித்த பிரச்னைகள் முறியடிக்கப்பட்டுள்ளதால், பெரிய மருந்துகளைப் போலவே பெரிய எண்ணெய் பதற்றமும் நிலவும். ஆதாயம் பெருபவர்கள் யார்.? ஏமாற்றப்படுபவர்கள் யார்.? என்பதை புரிந்து கொண்டு மக்கள் கூட்டாக செயல்பட்டால் மட்டுமே இத்தகைய சூழ்நிலைகளை சமாளிக்க முடியும்.

இதையும் படிங்க: கரோனா போரில் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை!

ABOUT THE AUTHOR

...view details