தமிழ்நாடு

tamil nadu

இலவச ரொட்டி வங்கி; அசத்தும் சத்தீஸ்கர் குழுவினர்!

By

Published : Jul 20, 2019, 11:14 PM IST

சத்தீஸ்கர்: ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கள் என்ற புதிய முயற்சியினால் நாடு முழுவதும் அதன் செயல்பாடுகளால் பாராட்டைப் பெற்று வருகிறது ரொட்டி வங்கி (Roti bank).

social-media-offers-roti-bank-platform-to-increase-reach

ராய்ப்பூரில் கடந்த ஆண்டு 12 நபர்களுடன் தொடங்கப்பட்ட இந்த இலவச உணவு வழங்கும் திட்டம் இன்று நாடு முழுவதும் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த கிஷோர் திவாரி என்பவரால் தொடங்கப்பட்ட இந்த ரொட்டி வங்கி இன்று இந்தியா முழுவதும் பிரபலமடைந்து வருகிறது.

ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கள் என்ற புதிய முயற்சி

இந்நிறுவனத்தில் சேரும்போது ’தொண்டர்கள் 500’ என்ற கணக்கின் கீழ் தொண்டர்கள் தொகையை வழங்கி வருகின்றனர். இவர்கள் இலவச உணவைத் தயாரிக்க விறகுகளைப் பயன்படுத்துகின்றனர், இதற்கான பொருட்கள் பொதுவாக மக்களிடமிருந்து பெறப்படும் நன்கொடைகளிலிருந்து வருகின்றன.

குழுவின் தலைவர் பூனம் அகர்வால் கூறுகையில், வழக்கமாக நன்கொடை அளிக்கும் நபர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள்.

திருமணங்கள், பிறந்தநாள் விழாக்கள் மற்றும் பிற செயல்பாடுகளிலிருந்து உபரி உணவை எங்கள் அமைப்பு சேகரிக்கிறது. பின்னர் அவ்உணவை தேவைப்படுபவர்களுக்கு அளித்து வருகிறோம்.

ஆரம்பத்தில் இவ்வாறன செயல்பாடுகள் கடினமாகவே இருந்தது. பல்வேறு சமூக ஊடகங்களின் உதவியால் இன்று இது சுமுகமாக செயல்பட்டு வருகிறது, என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details