தமிழ்நாடு

tamil nadu

பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதித்த ரயில் நிலையம்!

By

Published : Jan 7, 2020, 1:59 PM IST

வாரணாசி ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக்குகளுக்கு தடைவிதிக்கப்பட்டு, அதற்கு பதில் மண்பாண்டங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Train
Train

இந்தியன் ரயில்வே அதன் ரயில்களிலும் நடைமேடைகளிலும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதை தடை செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக்குகளுக்கு பதில் பானைகள், கண்ணாடிகள், தட்டுகள் ஆகியவற்றை பயன்படுத்துமாறு வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் பானை செய்பவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக அலுவலர்கள் கூறுகின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி கீழ் இயங்கும் கடைகள், தனியார் கடைகள் ஆகியவை டீ, காபி போன்றவற்றை மண்பாண்ட கப்புகளில் வழங்கி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், வாரணாசி ரயில் நிலையத்தை பிளாஸ்டிக் இல்லா ரயில் நிலையமாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதித்த ரயில் நிலையம்

தண்ணீர் மட்டும் பிளாஸ்டிக் கப்புகளில் வழங்கப்படுகிறது. மற்ற அனைத்தும் காகித பை அல்லது மக்கக்கூடிய பைகளில் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்களுக்கு ரயில்வே அமைச்சகம் தடை விதித்தது.

இதையும் படிங்க: பேரழிவு சேதத்திற்கு நிவாரணம்: 7 மாநிலங்களுக்கு ரூ.5,908 கோடி ஒதுக்கீடு!

plastic story for Jan 07


Conclusion:

ABOUT THE AUTHOR

...view details