தமிழ்நாடு

tamil nadu

குழந்தை கடத்தலை தடுக்க விதிகள் மற்றுமே உதவாது - உச்ச நீதிமன்றம்

By

Published : Jun 9, 2020, 12:16 AM IST

டெல்லி: குழந்தை கடத்தலை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், அதற்கு விதிகள் மற்றுமே உதவாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில், குழந்தை கடத்தல் அதிகரித்திருப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டினர். இதனிடையே, குழந்தை கடத்தலை தடுக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் அரசு சாரா அமைப்பான பச்பன் பச்சோ அந்தோலன் பொதுநல வழக்கை தொடர்ந்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே, நீதிபதிகள் ஏ. எஸ். போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

ஊரடங்கு காலத்தில் அதிகரித்துள்ள குழந்தை கடத்தல் குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். ஒப்பந்ததாரர் குழந்தை தொழிலாளியை பணியில் அமர்த்தாத படி அமைப்பு உருவாவது முக்கியம், இதுகுறித்த வாசகம் ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், "குழந்தை கடத்தலை தடுக்க விதிகள் மற்றுமே உதவாது. குழந்தை தொழிலாளிகளுக்கு குறைந்த ஊதியம் அளிக்கலாம் என்பதால், அவர்களுக்கான சந்தையை நாம்தான் உருவாக்கி தருகிறோம். எனவே, இதனை ஒப்பந்ததாரரிடமிருந்து தொடங்க வேண்டும். ஒப்பந்ததாரர்கள் பதிவு செய்ய வேண்டும். குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தவில்லை என்பதை அவர்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் உறுதி செய்ய வேண்டும்" என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும் வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிங்க: சுனந்தா புஷ்கர் வழக்கு: ட்விட்டர் பதிவுகளை சேகரிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details