ETV Bharat / bharat

சுனந்தா புஷ்கர் வழக்கு: ட்விட்டர் பதிவுகளை சேகரிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

author img

By

Published : Jun 8, 2020, 5:04 PM IST

டெல்லி: சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில், அவரின் ட்விட்டர் பதிவுகளை சேகரிக்க விசாரணை அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி நீதிமன்றம்
டெல்லி நீதிமன்றம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவர் சசி தரூர். இவரின் மனைவி சுனந்தா புஷ்கர் 2014ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி, டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்த மரணம் அப்போது பல சர்ச்சைகளைக் கிளப்பியது. இந்த வழக்கில் சசி தரூர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இந்நிலையில், டெல்லி காவல்துறை சுனந்தாவின் ட்விட்டர் பதிவுகளை குற்றப்பத்திரிகையில் சேர்க்கவில்லை என்று கூறி, சசி தரூர் தரப்பு மூத்த வழக்கறிஞர் விகாஸ் பஹ்வா, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சுனந்தாவின் கடைசி ட்வீட்டின்படி, அவர் மனநிலை சாதாரணமாக இருப்பதாகத் தெரிகிறது என்றும், இறப்பதற்கு முன்பு வரை அதாவது ஜனவரி 17ஆம் தேதி அதிகாலை 4.46 வரை அவர் ட்வீட் செய்துள்ளார். டெல்லி காவல் துறையினர் குற்றப்பத்திரிகையின் ஒரு பகுதியாக ட்விட்டர் பதிவுகளை முறையாகத் தாக்கல் செய்யவில்லை, பல சமூக ஊடக தளங்களில், இந்த விவரங்கள் இருக்கின்றன என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்த நீதிபதி மனோஜ் குமார் ஓரி, சுனந்தாவின் ட்விட்டர் பதிவுகள் முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே, விசாரணை அதிகாரி ட்விட்டர் நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி சம்பந்தப்பட்ட அனைத்து பதிவுகளையும் சேகரிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஊரடங்கால் குடும்ப வன்முறை அதிகரிப்பு: மறுப்பு தெரிவித்த மத்திய அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.