தமிழ்நாடு

tamil nadu

'மணலை குறைந்த விலையில் விற்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்'

By

Published : Jan 14, 2020, 12:03 PM IST

புதுச்சேரி: மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை குறைந்த விலையில் விற்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு வலியுறுத்தியுள்ளது.

port inspection
port inspection

புதுச்சேரி மாநிலம், காரைக்காலிலுள்ள மார்க் தனியார் துறைமுகத்தைசட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் தலைமையிலானபுதுச்சேரி சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு இன்று ஆய்வு மேற்கொண்டது. துறைமுகத்தின் மாசு கட்டுப்பாடு, உள்ளூர் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல அம்சங்களை இந்தக் குழு ஆய்வு செய்தது.


அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த மதிப்பீட்டுக் குழுத் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான அன்பழகன், "புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்கு மணல் தட்டுப்பாட்டைப் போக்க புதுச்சேரி அரசு மலேசியா நாட்டிலிருந்து 55 ஆயிரம் டன் மணல் இறக்குமதி செய்யப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மார்க் தனியார் துறைமுகத்தை அன்பழகன் ஆய்வு

ஆனால், மணலின் விலை அதிகமாக இருப்பதன் காரணமாக, விற்பனையாகாமல் துறைமுகத்திலையை தேங்கியுள்ளது. எனவே மணலை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.இதன்மூலம் மணல் தட்டுப்பாடு வெகுவாக குறையும்" என்றார்.

இதையும் படிங்க: ‘என் சகோதரர்களை எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் சேர்க்க போலீசார் முயற்சிக்கின்றனர்’

Intro:மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை குறைந்த விலையில் விற்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்டமன்ற மதிப்பீட்டு குழு வலியுறுத்தல்.
Body:மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை குறைந்த விலையில் விற்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்டமன்ற மதிப்பீட்டு குழு வலியுறுத்தல்.


புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் உள்ள மார்க் தனியார் துறைத்தை புதுச்சேரி மாநிலம் சட்டமன்ற மதிப்பீட்டு குழு சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில் இன்று ஆய்வு மேற்கொண்டனர். துறைமுகத்தின் மாசு கட்டுப்பாடு, உள்ளூர் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல அம்சங்களை இந்த குழு ஆய்வு செய்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த மதிப்பீட்டுக் குழு தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன்
புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்கு மணல் தட்டுப்பாடு போக்க புதுச்சேரி அரசு மலேசியா நாட்டில் இருந்து 55 ஆயிரம் டன் மணல் காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்திற்கு கப்பலில் தனியார் நிறுவனம் மூலம் கொண்டுவந்து மணலை விற்பனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்றும். ஆனால், மணலின் விலை அதிகமாக இருப்பதன் காரணமாக மணலில் விற்பனையாகாமல் துறைமுகத்திலையை தேங்கி இருப்பதாகவும், இறக்குமதி செய்யப்பட்ட மணலை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், இதன்மூலம் மணல் தட்டுப்பாடு வெகுவாக குறையும் எனவும் தெரிவித்தார். இந்த ஆய்வில் மதிப்பீட்டுக் குழு தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள் கீதாஆனந்தன் ,அசனா , ஜெயமூர்த்தி ,வெங்கடேசன், சங்கர் மற்றும் புதுச்சேரி அரசின் வளர்ச்சி ஆணையர் அன்பரசு ஐ.ஏ.எஸ், காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் ஆதர்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பேட்டி: அன்பழகன் (தலைவர். மதிப்பீட்டுக் குழு).
Conclusion:

ABOUT THE AUTHOR

...view details