தமிழ்நாடு

tamil nadu

தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் உயர்வு

By

Published : Sep 17, 2019, 2:50 PM IST

pf-percentage-increased-for-labors ()

டெல்லி: தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.55 சதவிகிதத்திலிருந்து 8.65 சதவிகிதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

பணிபுரியும் நிறுவனங்களில் இபிஎஃப் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதியில் உறுப்பினராக உள்ள தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ஊதியத்திலிருந்து குறிப்பிட்ட தொகை வருங்கால வைப்புநிதிக் கணக்கில் வரவு வைக்கப்படும். தொழிலாளர்களில் எதிர்கால நலன் கருதி பணி ஓய்வுக்குப் பின் இந்தத் தொகை பயனாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்புநிதிக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு தற்போது உயர்த்தியுள்ளது. அந்த வகையில், 8.55 சதவிகிதமாக இருந்த வட்டி விகிதத்தை தற்போது 8.65 சதவிகிதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Intro:Body:

https://www.polimernews.com/dnews/80484


Conclusion:

ABOUT THE AUTHOR

...view details