தமிழ்நாடு

tamil nadu

அக்டோபர் 31ஆம் தேதி காவிரி ஒழுங்காற்றுக்குழுக் கூட்டம்!

By

Published : Oct 19, 2019, 1:27 PM IST

சென்னை: 13ஆவது காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுக் கூட்டம்  வரும் அக்டோபர் 31ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் என காவிரி ஒழுங்காற்றுக்குழுத் தலைவர் நவீன்குமார் தெரிவித்துள்ளார்.

cauvery

காவிரி நீர் பங்கீடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதற்காக காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழுக் கூட்டம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய நீர் மேலாண்மை வாரியம் இவ்விரு அமைப்புகளையும் அமைத்தது.

இதனைத்தொடர்ந்து, இவ்விரு அமைப்புகளுக்கான ஆலோசனை கூட்டங்கள் இதுவரை டெல்லி, பெங்களூரில் நடந்துவந்தது. இதில் கர்நாடகா, தமிழ்நாடு மாநில நீர் மேலாண்மை அலுவலர்கள் பங்கேற்று வந்தனர். கடைசியாக டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக்குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசானது அடுத்த காவிரி ஒழுங்காற்றுக்குழுக் கூட்டம் தமிழ்நாட்டில் நடத்தவேண்டுமென கோரிக்கை வைத்தது.

அதன்படி, 13ஆவது காவிரி ஒழுங்காற்றுக்குழுக் கூட்டம் வரும் அக்டோபர் 31ஆம் தேதி திருச்சியில் நடைபெறுமென காவிரி ஒழுங்காற்றுக்குழுத் தலைவர் நவீன்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இக்கூட்டம் நடைபெறுவது முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில், தமிழ்நாடு சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசன், காவிரி தொழில்நுட்பத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

மேலும் படிங்க: காவிரி ஆற்றில் 20,500 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

ABOUT THE AUTHOR

...view details