தமிழ்நாடு

tamil nadu

ட்விட்டரில் டிரெண்டான #NoToJaiShriRam

By

Published : Jun 26, 2019, 5:10 PM IST

ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடக் கட்டாயப்படுத்தித் தாக்குதல்கள் நடைபெறுவதைக் கண்டித்து உருவாக்கப்பட்ட #NoToJaiShriRam ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டிங்கில் உள்ளது.

ட்விட்டரில் டிரெண்டான #NoToJaiShriRam

ஜார்கண்ட் மாநிலம் கர்சவன் மாவட்டத்தில் தப்ரெஸ் என்ற இளைஞனை பைக் திருடியதாகக் கூறிப் பிடித்த அக்கிராம மக்கள், காவல்துறையினரிடம் ஒப்படைக்காமால் சுமார் எட்டு மணி நேரம் ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான் என்று முழக்கமிட வற்புறுத்தித் தாக்குதல் நடத்தினர். பின்னர் காவல்துறையினரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த சனிக்கிழமையன்று உயிரிழந்தார்.

அதேபோல மேற்கு வங்கத்தில் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிடமறுத்த மதர்ஸா ஆசிரியர் ஹபீஸ் மோஹத் ஷாருக் ஹால்டர், இந்துத்துவ பயங்கிரவாதிகளால் ரயிலிலிருந்து தூக்கிவீசப்பட்டார்.

சமீபகாலமாக ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடக்கோரி இந்துத்துவ பயங்கிரவாதிகள் அப்பாவி மக்களைத் தாக்கும் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை எதிர்த்து ட்விட்டரில் #NoToJaiShriRam என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது. இப்போது அந்த ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகியிருக்கிறது.

முன்னதாக மத்திய சிறுமான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடாதவர்களை இதுபோன்று தாக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details