தமிழ்நாடு

tamil nadu

ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் புதிய திட்டம்

By

Published : Feb 21, 2020, 8:29 PM IST

புதுச்சேரி: ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா தனது நேரடி நெல் கொள்முதலை காரைக்கால் விவசாயிகளிடம் இன்று தொடங்கியது.

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை  ஆட்சியர் அர்ஜுன் சர்மா துவங்கி வைக்கிறார்
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆட்சியர் அர்ஜுன் சர்மா துவங்கி வைக்கிறார்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் காவிரி நீர், மழை நீர் மற்றும் நிலத்தடி நீர் பொய்த்துப்போனதன் விளைவாக கடந்த பல ஆண்டுகளாக விவசாயம் என்பது கேள்விக்குறியாக மாறி இருந்தது.

இந்நிலையில், இந்தாண்டு காவிரி மற்றும் மழை நீர் கை கொடுத்ததன் பயனாக காரைக்கால் மாவட்டத்தில் 4000 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டு எப்போதும் இல்லாத அளவு நல்ல விளைச்சல் கண்டது. தற்போது அறுவடையும் நடைபெற்றுவருகிறது.

இச்சூழலில் கடந்த பல ஆண்டுகளாக போதிய நெல் கொள்முதல் செய்ய முடியாத காரணத்தால் சரியான முறையில் செயல்படாமல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இருந்தன. எந்த ஆண்டும் இல்லாத அளவு இந்த ஆண்டு விளைச்சலை அடுத்து காரைக்கால் மாவட்டத்திலுள்ள தென்னங்குடியில் இந்திய உணவுக் கழகம் மூலமாக (Food Corporation Of India) நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா தொடங்கிவைத்தார்.

ஆட்சியர் அர்ஜுன் சர்மா

அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர்:

காரைக்கால் விவசாயிகளிடமிருந்து எந்த வித இடையூறுமின்றி நேரடியாக எவ்வளவு அதிகப்படியான நெல்லை கொள்முதல் செய்ய செய்ய முடியுமோ அந்த அளவுக்கு நெல் கொள்முதல் செய்யவேண்டும். தேவைக்கேற்ப கூடுதல் நிலையங்கள் திறக்கப்படும் என்றார்.

இதையும் படியுங்கள்: மாணவர்களின் நேர்மைப் பண்பை வளர்க்க 'நேர்மை அங்காடி' திறப்பு

ABOUT THE AUTHOR

...view details