தமிழ்நாடு

tamil nadu

உ.பியில் பான் மசாலா மீதான தடை நீக்கம்!

By

Published : May 7, 2020, 2:53 PM IST

லக்னோ: சில தளர்வுகளுடன் நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், உத்தர பிரதேசத்தில் பான் மசாலா தயாரிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடையை அம்மாநில அரசு நீக்கியுள்ளது.

Lockdown 3.0: Yogi govt allows sale of paan masala, opening stationery and book shops
Lockdown 3.0: Yogi govt allows sale of paan masala, opening stationery and book shops

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரையும் பின் ஏப்ரல் 15 முதல் மே 3 வரையும் ஊரடங்கை நீட்டித்திருந்தது. இதனால் வைரஸ் பரவல் பாதிப்பு ஓரளவிற்குக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மத்திய அரசு கடந்தவாரம் மூன்றாம் கட்டமாக மே 17 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்தது. இந்த ஊரடங்கு உத்தரவில் கட்டுப்பாடுகளுடன் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடாக, தெலங்கானா மாநிலங்களில் ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், உத்தர பிரதேச மாநிலத்தில் பான் மலாசா தயாரிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடையை யோகி ஆதித்யநாத் அரசு நீக்கியுள்ளது. இருப்பினும், மாநிலத்தில் குட்கா, புகையிலை விற்பனை அனுமதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டெல்லியில் ஒரே நாளில் 428 பேருக்கு கரோனா பாதிப்
பு

ABOUT THE AUTHOR

...view details