தமிழ்நாடு

tamil nadu

கொல்கத்தாவில் மீட்புப் பணிகள் தீவிரம்!

By

Published : May 25, 2020, 2:02 AM IST

கொல்கத்தா: தெற்கு கொல்கத்தாவில் ஆம்பன் புயலால் சேதமான பகுதிகளில் பாதுகாப்புப் படை வீரர்களும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் இணைந்து துரிதமாக மீட்புப் பணிகளைச் செய்து வருகிறார்கள்.

கொல்கத்தாவில் மீட்புப் பணிகளில் பாதுகாப்பு - பேரிடர் படைகள் தீவிரம்!
கொல்கத்தாவில் மீட்புப் பணிகளில் பாதுகாப்பு - பேரிடர் படைகள் தீவிரம்!

ஆம்பன் புயலால் மேற்கு வங்க மாநிலம் கடந்த புதன்கிழமை (மே-20) பெரும் பாதிப்பைச் சந்தித்தது. இந்தப் புயலால் மேற்கு வங்கம் மாநிலம் உட்பட கடலோர மாநிலங்களில் 80 பேர் உயிரிழந்தனர்.

மேலும் புயல் சேதப்படுத்திய இடங்களைச் சரி செய்து, உதவ அம்மாநில அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, மத்திய அரசு நான்கிலிருந்து ஐந்து படை கொண்ட பாதுகாப்பு வீரர்களை அனுப்பி வைத்தது. அவர்களும் தேசியப் பேரிடர் மீட்புப் படை வீரர்களும் சேர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.

சேதமடைந்த மரங்கள், முறிந்த மின்சாரக் கம்பிகளில் விழுந்து சிக்கி உள்ளதால், அதனை அகற்றுவதில்தான் பெரும் சவாலாக அவர்களுக்கு இருந்து வருகிறது.

சுந்தர்பனில் உள்ள கிழக்கு சாகர் தீவு உள்ளிட்டப் பகுதிகளில், புயலால் துண்டிக்கப்பட்ட தொலைத்தொடர்பு, மின்சாரம், சாலை இணைப்புகள் ஆகியவை சரி செய்யப்பட்டிருக்கிறது.

கொல்கத்தாவில் மீட்புப் பணிகளில் பேரிடர் படைகள் தீவிரம்!

இதையும் படிங்க:ஆம்பன் உடனுக்குடன்: பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details