ETV Bharat / bharat

ஆம்பன் உடனுக்குடன்: பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி

author img

By

Published : May 22, 2020, 10:50 AM IST

Updated : May 22, 2020, 6:22 PM IST

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

18:09 May 22

மத்திய அரசு ஒடிசாவிற்கு ரூ .500 கோடி நிவாரண நிதியை அறிவிக்கிறது

ஒடிசாவில் மோடி
ஒடிசாவில் மோடி

ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு ரூ.500 கோடி நிவாரண நிதி வழங்கப்படும். கூடுதல் நிதி தேவைப்படும் பட்சத்தில் மத்திய அரசு மேலும் உதவும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

17:40 May 22

ஆம்பன் புயலின் பெரும் சேதத்தை அறிந்து வேதனை அடைகிறேன் - முதலமைச்சர் பழனிசாமி

இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், எதிர்பாராத ஆம்பன் புயல் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் பல பகுதிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அச்செய்தி அறிந்து வேதனை அடைகிறேன். விரைவில் அங்கு இயல்புநிலை திரும்பும் என நம்புகிறேன் எனப் பதிவிட்டுள்ளார். 

17:35 May 22

டெல்லி மக்கள் சார்பாக எங்கள் முழு ஒத்துழைப்பை தெரிவிக்கிறோம் - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

  • Dear @MamataOfficial didi, on behalf of the people of Delhi, I extend our full support and solidarity with you and the people of West Bengal in the wake of the destruction caused by #CycloneAmphan. Kindly let us know if we could help in any manner in this hour of crisis.

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) May 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், ஆம்பன் புயலால் ஏற்பட்ட பாதிப்பை அடுத்து, மேற்கு வங்கம், ஒடிசாவைச் சேர்ந்தவர்களுக்கு டெல்லி மக்கள் சார்பாக முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் தெரிவிக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.  

15:25 May 22

ஒடிசா சென்றடைந்தார் பிரதமர்

புவனேஸ்வர் விமான நிலையத்தில் மோடி
புவனேஸ்வர் விமான நிலையத்தில் மோடி

ஒடிசா: புவனேஸ்வர் விமான நிலையத்திற்கு சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அவரை ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் மற்றும் ஆளுநர் கணேஷி லால் ஆகியோர் வரவேற்றனர்.

13:13 May 22

ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநிலத்திற்கு ரூ.1,000 கோடி நிவாரண நிதி வழங்கப்படும்

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை பார்வையிட்டப் பின் பிரதமர் மோடி, பசிர்ஹாட்டில் ஆலோனை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநிலத்திற்கு ரூ.1,000 கோடி நிவாரண நிதி வழங்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவியும் அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். அவருடன் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜகதீப் தங்கர் உடனிருந்தனர்.

12:38 May 22

ஹெலிகாப்டரில் பிரதமர் நரேந்திர மோடியும், மம்தா பானர்ஜியும் பாதிப்புக்குள்ளான பகுதிகளை பார்வையிட்டு வருகின்றனர்.

ஹெலிகாப்டரில் பிரதமர் நரேந்திர மோடியும், மம்தா பானர்ஜியும்

மேற்கு வங்கத்தில் பாதிப்புக்குள்ளான பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடியும், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் ஹெலிகாப்டரில் பார்வையிட்டு வருகின்றனர்.

11:36 May 22

கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா

மம்தா பானர்ஜி
கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மம்தா

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ஆம்பன் புயலால் இதுவரை 80 பேர் உயிரிழந்ததாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

10:55 May 22

கொல்கத்தா விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி

கொல்கத்தா விமான நிலையதில் பிரதமர் மோடி

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தா விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. அவரை அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் ஆளுநர் ஜகதீப் தங்கர் ஆகியோர் வரவேற்றனர்.

10:30 May 22

ஆம்பன் உடனுக்குடன்: பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி

PM Modi to undertake aerial surveys of cyclone
டெல்லியிலிருந்து புறப்பட்டபோது

ஆம்பன் புயலின் பாதிப்புகள் குறித்து அறிந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் மேற்கு வங்கம் நோக்கி புறப்பட்டுள்ளார். அங்கிருந்து அவர் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் பார்வையிட உள்ளார்.

காலை மேற்கு வங்க பகுதிகளைப் பார்வையிடும் பிரதமர், மதியம் ஒடிசா செல்கிறார். அதன்பின், அவர் நிவாரண நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வார்”

Last Updated :May 22, 2020, 6:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.