தமிழ்நாடு

tamil nadu

கரோனா தடுப்பூசி வரும்வரை ஊரடங்கில் தளர்வு இல்லை - பிரதமர்

By

Published : Sep 14, 2020, 12:52 PM IST

டெல்லி: நாட்டில் கரோனா தடுப்பூசி செயல்பாட்டிற்கு வரும்வரை ஊரடங்கிற்குத் தளர்வுகளை அறிவிக்க முடியாது எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

'Hope Parliament sends message country stands with soldiers'
'Hope Parliament sends message country stands with soldiers'

இன்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டுத் தொடரில் பங்கேற்பதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “லடாக்கில் சீனாவுடன் நடந்துவரும் எல்லைப் பிரச்னைகளில், கடினமான மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் நிற்கும்போது இந்திய வீரர்கள் தைரியமாக தங்கள் கடமைகளை நிறைவேற்றிவருகின்றனர்.

இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்கும் ராணுவப் படையினருக்குப் பின்னால் நாடு உறுதியாக நிற்கிறது என்ற செய்தியை நாடாளுமன்றம் ஒற்றுமையாக உறுதியளிக்கும்.

இரு அவைகளிலும் பல்வேறு விஷயங்கள் குறித்த கலந்துரையாடல்களுடன், நாடாளுமன்ற நடவடிக்கைகளின்போது முக்கிய முடிவுகளும் எடுக்கப்படும்.

கரோனா தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதத்தில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் காலம் குறைக்கப்பட்டது. தற்போது, நாட்டில் 47.5 லட்சத்திற்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள சூழலில் இந்த அமர்வு கூடுகிறது.

நாட்டில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசி வரும்வரை ஊரடங்கில் தளர்வு என்பது இல்லை. உலகில் தடுப்பூசி தயாரிக்கும் அனைத்து இடங்களிலிருந்தும் தடுப்பூசிகளைப் பெற இந்திய அரசு முயற்சித்துவருகிறது.

கரோனா நெருக்கடிக்கு மத்தியில் பருவமழை அமர்வில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள்” எனத் தெரவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details