தமிழ்நாடு

tamil nadu

ஏப்ரலில் தங்கத்தின் இறக்குமதி 54 விழுக்காடு அதிகரிப்பு!

By

Published : May 21, 2019, 9:40 AM IST

டெல்லி: ஏப்ரல் மாதத்தில் நாட்டின் தங்கம் இறக்குமதி 54 விழுக்காடு அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

நடப்பாண்டில் ஏப்ரல் மாதத்தில் தங்கம் இறக்குமதி 54 விழுக்காடு அதிகரித்து 397 கோடி ரூபாயைத் தொட்டுள்ளது. இதே 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 258 கோடி ரூபாய்க்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது.

நாட்டின் வர்த்தக பற்றாக்குறையால் தங்கத்தின் இறக்குமதியானது கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு ஏப்ரலில் 1,533 கோடி டாலராக அதிகரித்திருந்தது.

அந்நியச் செலவாணி வரவு, செலவு ஆகியவற்றிற்கு இடையேயான வித்தியாசமே நடப்பு கணக்கு பற்றாக்குறை (சிஏடி) ஆகும். இந்த நடப்பு கணக்கு பற்றாக்குறையானது கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 2.5 விழுக்காடு உயர்ந்ததற்கு வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பே காரணமாகும்.

தங்கத்தின் இறக்குமதியானது பிப்ரவரியில் வீழ்ச்சியைக் (எதிர்மறை வளர்ச்சி) கண்டாலும், மார்ச் மாதத்தில் அதன் இறக்குமதி 31 விழுக்காடு அதிகரித்து 327 கோடி டாலராக இருந்தது.

இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்வதில் உலக நாடுகள் மத்தியில் முன்னணி வகிக்கிறது. நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால், இந்தியா வருடத்திற்கு 800-900 டன் தங்கத்தை இறக்குமதி செய்துவருகிறது. 2018-19ஆம் நிதியாண்டில் தங்கத்தின் இறக்குமதி மதிப்பின் அடிப்படையில் மூன்று விழுக்காடு குறைந்து 3,280 கோடி டாலராக இருந்தது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:Conclusion:

ABOUT THE AUTHOR

...view details