தமிழ்நாடு

tamil nadu

75 லட்சம் தாங்க இல்லைனா...கிட்னிய வித்துறுவேன்! - அதிர்ந்துபோன தேர்தல் ஆணையம்

By

Published : Apr 16, 2019, 12:51 PM IST

give me 75 lakh or allow me to sell kidney balaghat candidate to EC ()

போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள பாலகாத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையத்திடம் 75 லட்சம் தரவேண்டும் எனவும் அப்படி இல்லையென்றால் தனது கிட்னியை விற்றுவிட போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏவான கிஷோர் சாம்ரைட் வருகிற மக்களவைத் தேர்தலில் பாலகாத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட இருக்கிறார்.

இந்நிலையில் மாவட்டத் தேர்தல் அதிகாரி தீபக் ஆரியாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, ”இந்திய தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தல் செலவுகளின் உச்ச வரம்பு ரூ 75 லட்சமாக நிர்ணயித்துள்ளது.

ஆனால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை. அதனால் தேர்தல் ஆணையம் தனக்கு ரூ. 75 லட்சம் தர வேண்டும். அப்படி இல்லையென்றால் தனது கிட்னியை விற்க அனுமதிக்க வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Intro:Body:

https://www.indiatoday.in/elections/lok-sabha-2019/story/balaghat-candidate-lok-sabha-election-75-lakh-kidney-sell-kishore-samrite-1502814-2019-04-16


Conclusion:

ABOUT THE AUTHOR

...view details