பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி, இந்தியா குறித்தும், காஷ்மீர் குறித்தும் அவ்வப்போது சில நேரங்களில் பேசும் விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தும். தற்போது அப்ரிடி மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குச் சென்ற அவர், "உலகமே கரோனா வைரஸ் பாதிப்பால் மோசமாகியுள்ளது. ஆனால் அதைவிட மோடியின் மனமும், இதயமும் மோசமானது" எனப் பேசி வீடியோ வெளியிட்டார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், ''சிலர் வயதில் முதிர்ச்சியடைந்தாலும், மனதளவில் முதிர்ச்சியடையவில்லை. 20 கோடி மக்கள் இருக்கும் நாட்டில் 7 கோடி பேர் ராணுவத்தில் இருப்பதாகச் சொல்கிறார் அப்ரிடி. அப்படி இருந்தும் 70 ஆண்டுகளாக காஷ்மீருக்காகக் கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்.