தமிழ்நாடு

tamil nadu

காஷ்மீரில் ஊடுருவிய இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

By

Published : Oct 10, 2020, 12:15 PM IST

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் ஊடுருவிய இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டு கொன்றுள்ளனர்.

security forces
security forces

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள சின்கம் பகுதியில் இன்று(அக்.10) அதிகாலை பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. அங்கு வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்ட ராணுவம், காவல் துறையினர் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்தினர்.

இதையடுத்து இருதரப்புக்கும் தீவிரமான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பயங்கரவாதிகள் இருவரும் சுட்டு கொல்லப்பட்டனர். அங்கிருந்து பயங்கர ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவர்கள் உடல் உடற்கூராய்வுக்காக கொண்டு செல்லப்பட்டு அடையாளம் காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இவர்கள் இருவரும் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என இதுவரைக் கண்டறியப்படவில்லை. கடந்த 15 நாள்களில், சோபியான், அவந்திபூரா ஆகிய இடங்களில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் ஏழு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

இதையும் படிங்க:பசியால் மண்ணை உணவாக உட்கொள்ளும் மாடுகள்! அதிர்ச்சி காணொலி!

ABOUT THE AUTHOR

...view details