தமிழ்நாடு

tamil nadu

பாஜக அமைச்சரால் செய்தியாளர்களுக்கு கரோனா?

By

Published : Mar 21, 2020, 1:14 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேச மாநில சுகாதாரத் துறை அமைச்சருக்கு கோவிட் 19 வைரஸ் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவர் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட செய்தியாளர்களின் நிலை கேள்விக்குள்ளாகியுள்ளது.

MLAs self-quarantined
MLAs self-quarantined

பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர் லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கடந்த வாரம் இந்தியா திரும்பினார். வெளிநாட்டிலிருந்து இந்தியா வருபவர்கள், தங்களைத் தாங்களே ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலை துளியும் கண்டுகொள்ளாமல் கனிகா கபூர் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார்.

அப்படி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இவருடன் பாஜகவின் உத்தரப் பிரதேச சுகாதாரத் துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் பங்கேற்றுள்ளார். கனிகா கபூருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

ஆனால், அதற்கு முன் வெள்ளிக்கிழமை வரை அவர் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துகொண்டுள்ளார். மேலும், புதன்கிழமை அவர் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, 50 செய்தியாளர்கள் வரை அதில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அனைத்து செய்தியாளர்களும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details