ETV Bharat / bharat

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

author img

By

Published : Mar 21, 2020, 11:51 AM IST

டெல்லி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் இருநாடுகள் எவ்வாறு ஒத்துழைப்பு கொடுப்பது என்பது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேபாள நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார்.

நோபாள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்  ஜெய்சங்கர்  நேபாளா நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்  india nepal discuss enhancing cooperation to combat covid-19 spread
கரோன பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. சார்க் நாடுகள் ஒன்றாக இணைந்து கரோனாவுக்கு எதிராகச் செயலாற்ற வேண்டும் என்று நேற்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதீப் குமார் ஜியாவளியுடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், கரோனாவை எதிர்கொள்வது குறித்து தொலைபேசியில் உரையாடினார்.

கரோனா பரவிவரும் சூழலில் இருநாடுகளும் மருந்துப் பொருள்கள், அத்தியாவசியப் பொருள்களைப் பரிமாற்றி ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு கொடுப்பது குறித்து விவாதித்தனர். மேலும், இருநாட்டு எல்லைகளில் கரோனா பரவலைத் தடுக்கும்விதமாக எடுத்துள்ள தீவிர கண்காணிப்புகள் குறித்தும் பேசியுள்ளனர்.

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக நேபாளத்திற்கு உதவ முன்வந்திருக்கும் மத்திய அரசுக்கு பிரதீப் குமார் ஜியாவளி நன்றி தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரோனா அவசரகால நிதி: பூடான், நேபாள பிரமர்களுக்கு மோடி பாராட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.