தமிழ்நாடு

tamil nadu

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்பு!

By

Published : Jul 22, 2020, 5:06 PM IST

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கே.பி. முனுசாமி, மு.தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் மாநிலங்களவை தலைவரும் குடியரசுத் துணை தலைவருமான வெங்கையா நாயுடு முன்னிலையில் இன்று (ஜூலை22) பதவியேற்றுக்கொண்டனர்.

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் மு. தம்பிதுரை கே.முனுசாமி ஜிகே வாசன் பதவியேற்பு Rajya Sabha polls AIADMK Anthiyur' Selvaraj N R Elango 'Tiruchi' Siva K Munuswamy GK Vasan M ThambiDurai
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் மு. தம்பிதுரை கே.முனுசாமி ஜிகே வாசன் பதவியேற்பு Rajya Sabha polls AIADMK Anthiyur' Selvaraj N R Elango 'Tiruchi' Siva K Munuswamy GK Vasan M ThambiDurai

மாநிலங்களவைக்கு புதிதாக 45 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் 18 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள். இந்நிலையில் இவர்கள் இன்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர்.

அந்தவகையில், தமிழ்நாட்டில் அதிமுக சார்பில் மு.தம்பிதுரை, கே.முனுசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே.வாசன் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக இன்று (ஜூலை21) பதவியேற்றுக்கொண்டனர்.

மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.தம்பிதுரை, தலைவர் வெங்கையா நாயுடு முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்
மக்களவை தலைவர் வெங்கையா நாயுடு முன்னிலையில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட அதிமுக மூத்தத் தலைவர் கே.முனுசாமி

கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக பதவியேற்பு விழாவில் தகுந்த இடைவெளி உள்ளிட்ட இதர தனிநபர் பாதுகாப்பு அம்சங்கள் கடைப்பிடிக்கப்பட்டது.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட போது எடுத்த படம்

இந்த உறுப்பினர்கள் இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளதாகவும், இவர்களுக்கு தேநீர் விருந்தளித்து பிரதமர் நரேந்திர மோடி உபசரிக்கவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு ஆறு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் திமுகவை சேர்ந்த திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ் மற்றும் வழக்குரைஞர் இளங்கோ ஆகும்.

இதையும் படிங்க: தேர்வு செய்யப்பட்ட 45 உறுப்பினர்கள் இன்று மாநிலங்களவையில் பதவியேற்பு!

ABOUT THE AUTHOR

...view details