ETV Bharat / bharat

தேர்வு செய்யப்பட்ட 45 உறுப்பினர்கள் இன்று மாநிலங்களவையில் பதவியேற்பு!

author img

By

Published : Jul 22, 2020, 1:46 PM IST

டெல்லி: முன்னாள் பிரதமர் தேவகவுடா, தேசியவாத காங்கிரஸ் கட்சித்  தலைவர் சரத் பவார், தமிழ்நாட்டிலிருந்து திருச்சி சிவா, ஜி.கே. வாசன், தம்பிதுரை உள்ளிட்ட 45 பேர் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பதவியேற்கவுள்ளனர்.

45-out-of-61-newly-elected-rajya-sabha-mps-to-take-oath-today
45-out-of-61-newly-elected-rajya-sabha-mps-to-take-oath-today

இந்தியாவில் சுழற்சி முறையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், கடந்த மாதம் காலியாக இருந்த 61 இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

இதில் வெற்றிபெற்ற முன்னாள் பிரதமர் தேவகவுடா, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட 45 பேர் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பதவி ஏற்கவுள்ளனர். மேலும், தமிழ்நாட்டிலிருந்து திமுகவைச் சேர்ந்த என்.ஆர். இளங்கோ, பி செல்வராஜ், திருச்சி சிவா ஆகியோரும், அதிமுகவைச் சேர்ந்த கேபி முனுசாமி, தம்பிதுரை, ஜி.கே. வாசன் ஆகியோரும் பதவியேற்கின்றனர். இவர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறாமல், புதிய உறுப்பினர்கள் பதவியேற்பது வரலாற்றில் இதுவே முதல்முறை. முன்னதாக, கரோனா அச்சுறுத்தல் காரணமாக உறுப்பினர்களின் பதவியேற்பு விழா ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புத் தகுதி நீக்கப்பட்ட நாளில் காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த புவனேஸ்வர் கலிதா மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கவுள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியிலிருந்து கருத்து வேறுபாடு காரணமாக விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியாவும் இன்று பதவியேற்கிறார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.