தமிழ்நாடு

tamil nadu

"தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்கக் கூடாது" - முதலமைச்சருக்கு பசவராஜ் பொம்மை கடிதம்!

By

Published : Aug 14, 2023, 6:48 PM IST

கர்நாடக மக்களின் குடிநீர் தேவை மற்றும் விவசாயிகளின் நீர் தேவையை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து தண்ணீர் வழங்கக் கூடாது என முதலமைச்சர் சித்தராமையாவுக்கு முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கடிதம் எழுதி உள்ளார்.

Cauvery
Cauvery

பெங்களூரு : காவிரியில் இருந்து தமிழ் நாட்டிற்கு தண்ணீர் வழங்கக் கூடாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு, முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கடிதம் எழுதி உள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, "காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக அரசு மீண்டும் ஒரு நிலைப்பாட்டை எடுத்து இருப்பதை கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதேநேரம் தமிழ்நாடு அரசு காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளதை ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டோம்.

அடுத்தடுத்து வரும் முக்கியமான நகர்வுகளை கருத்தில் கொண்டு எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இந்த கடிதத்தை எழுதுகிறேன். கடந்த ஜூன் 1ஆம் தேதி கர்நாடகாவில் உள்ள நான்கு நீர்தேக்கங்களில் ஒட்டுமொத்தமாக 24 ஆயிரத்து 352 டிஎம்சி தண்ணீர் இருப்பு இருந்தது.

கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி, மேட்டூர் அணையில் 69 புள்ளி 77 டிஎம்சி தண்ணீரும், பவானி சாகர் நீர் தேக்கத்தில் 16 புள்ளி 653 டிஎம்சி நீர், மற்றும் பிலிகுண்டுலு வழியாக தமிழகத்திற்கு 14 புள்ளி 54 டிஎம்சி தண்ணீர் சென்று உள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் மேட்டூர் அணைக்கு 83 புள்ளி 831 டிஎம்சி அளவு நீவரத்து சென்று உள்ளது.

தமிழ்நாடு குறுவை சாகுபடிக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கர் பயிர் தேவை மற்றும் 32 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதியுடன் குறுவை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த அளவை காட்டிலும் இரண்டு மடங்கு, 60 புள்ளி 97 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாடு பயன்படுத்தி உள்ளது.

காவிரி படுகையில் தண்ணீர் பற்றாக்குறையை கண்டுகொள்ளாமலும், நீர் பங்கீடு அளவு உத்தரவை மீறியும், நான்கு பகுதிகளில் உள்ள குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு நமது அதிகாரிகள் காவரி நீர் மேலாண்மை ஆணையத்தில் எதிர்ப்பு தெரிவிக்காதது மாநில நலனுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

தற்போதுள்ள நான்கு அணைகளின் நீர்மட்டம் பெங்களூரு நகரம், நகரங்கள் மற்றும் காவிரி படுகையில் உள்ள கிராமங்களின் குடிநீருக்கு போதுமானதாக இல்லை. அதேபோல், காவிரி படுகையில் உள்ள காரீப் பயிர்கள் நைட்ரஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்படும். இந்த நிலையில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் கர்நாடக மக்களின் குடிநீர் மற்றும் விவசாயிகளுக்கு பயிருக்கான நீர் தட்டுப்பாடு ஏற்படும்.

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்" என அந்த கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க :அதானி முறைகேடு விசாரணை - உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் அவகாசம் கேட்கும் செபி!

ABOUT THE AUTHOR

...view details