லக்னோ:உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்த பிடெக் பட்டதாரியான ரோஹித் சர்மா என்ற இளைஞர், உலகின் மிக நீளமான எலக்ட்ரிக் பைக்கை உருவாக்கியுள்ளார். இதுகுறித்து ரோஹித் சர்மா கூறுகையில், "இந்த எலக்ட்ரிக் பைக் 13 அடி நீளம் கொண்டது. மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது. அதே வேளையில் 700 கிலோ எடை இழுக்கும் திறன்கொண்டது.
இதற்கு 2 மணிநேரம் சார்ஜ் செய்தால் போதும் 1,080 கிமீ வரை செல்லலாம். இதற்கு "மஹாபல் எலக்ட்ரிக் சாப்பர்" என்று பெயரிட்டுள்ளேன். என்னுடயை கல்வி உதவித்தொகை, பாக்கெட் மணியை வைத்து இந்த பைக்கை உருவாக்கினேன். இதனை உருவாக்க மொத்தமாக 50 நாள்கள் தேவைப்பட்டது. இதற்கு ரூ 1.2 லட்சம் விலை நிர்ணயித்துள்ளேன்" எனத் தெரிவித்தார்.