தமிழ்நாடு

tamil nadu

ஆம்புலன்ஸுக்காகக் காத்திருந்து உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை

By

Published : Apr 28, 2021, 12:42 PM IST

விசாகப்பட்டினத்தில் கரோனா பாதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் இடம் இல்லாத நிலையில் ஆம்புலன்ஸில் உயிரிழந்தார்.

ஆம்புலன்சுக்காக காத்திருந்து உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை
ஆம்புலன்சுக்காக காத்திருந்து உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை

ஆந்திரா: கடந்த முறை கரோனா பரவல் ஏற்பட்டபோது பெரும்பாலும் முதியவர்கள், உடல்நலம் சரியில்லாதவர்கள் என அதிகம் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள இரண்டாவது அலையில் குழந்தைகள், இளைஞர்கள் எனப் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் பலர் உயிரிழக்கிறார்கள்.

விசாகப்பட்டினம் அட்சுதபுரம் பகுதியைச் சேர்ந்த வீரபாபு. இவரது ஒன்றரை வயது குழந்தை ஜான்விகா. இந்நிலையில், குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். குழந்தைக்கு மூன்று நாள்கள் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

இதையடுத்து, அங்கு உள்ள கரோனா பிரிவில் படுக்கை காலியாக இல்லை. எனவே சுமார் இரண்டு மணி நேரம் ஆம்புலன்ஸில் காக்கவைக்கப்பட்ட குழந்தைக்கு அங்கேயே ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது. ஆனாலும் அந்தக் குழந்தை உயிரிழந்தார். இதையடுத்து குழந்தையின் பெற்றோர் அலறியடித்து அழுதனர்.

இதையும் படிங்க: மும்பை மருத்துவமனையில் தீ விபத்து - 4 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details