தமிழ்நாடு

tamil nadu

சமூக வலைதளங்களில் புரொஃபைல் போட்டோவாக தேசியக்கொடியை வையுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள்!

By

Published : Jul 31, 2022, 5:29 PM IST

Amrit
Amrit ()

'ஆகஸ்ட் 2 முதல் 15ஆம் தேதி வரை மக்கள் அனைவரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் புரொஃபைல் போட்டோவாக தேசியக்கொடியை பயன்படுத்த வேண்டும்' என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

டெல்லி: மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஜூலை 31), பிரதமர் மோடியின் ’மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, "ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்" ஒரு வெகுஜன இயக்கமாக மாறி வருவதில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார். இந்த இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மக்கள் அனைவரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் புரொஃபைல் போட்டோவாக தேசியக்கொடியைப்பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதேபோல் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை, வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க:டெல்லி காவல் ஆணையராக சஞ்சய் அரோரா நியமனம்!

ABOUT THE AUTHOR

...view details