தமிழ்நாடு

tamil nadu

அம்பானி வீட்டருகே வெடிகுண்டு வாகனம்... சிசிடிவியில் சிக்கிய ஓட்டுநர்

By

Published : Mar 9, 2021, 10:59 PM IST

மும்பை: அம்பானியின் வீட்டருகே வெடிகுண்டுகளுடன் இருந்த வாகனத்திலிருந்து ஒருவர் இறங்கி நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Bomb
மும்பை

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அல்டாமவுண்ட் சாலையில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே, வெடிப்பொருள்களுடன் நின்ற வாகனம் குறித்துக் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

அந்த வாகனத்திலிருந்து ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. மேலும், அந்த வாகனத்திலிருந்து மிரட்டல் கடிதம் ஒன்றையும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். தானேவில், அந்தக் காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரெனை, இறந்த நிலையில் காவல் துறையினர் கண்டெடுத்துள்ளனர். தற்போது, இவ்வழக்கின் விசாரணையைத் தேசிய புலனாய்வு அமைப்பு கையில் எடுத்துள்ளது.

சிசிடிவியில் சிக்கிய வாகன ஓட்டுநர்

இந்நிலையில், வெடிகுண்டுகளுடன் நின்ற வாகனத்திலிருந்து ஒருவர் வெளியேறி நடந்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அந்த நபர் யார் என்பது குறித்துக் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:இறந்தவருக்குப் பதவி உயர்வா..! - அதிர்ச்சியளித்த பிகார் அரசு

ABOUT THE AUTHOR

...view details