தமிழ்நாடு

tamil nadu

'இந்து' தேசியவாதத்தை 'இந்திய' தேசியவாதத்தின் மூலம் எதிர்கொள்வோம் - ஓவைசி

By

Published : Feb 8, 2021, 11:19 AM IST

'இந்து' தேசியவாதத்தை 'இந்திய' தேசியவாதத்தின் மூலம் எதிர்கொள்வோம் என ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

Asaduddin Owaisi
அசாத்துதீன் ஒவைசி

ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி குஜராத் மாநிலத்திற்கு நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலுக்குப் பரப்புரை மேற்கொள்ள சென்ற ஓவைசி ஏ.ஐ.எம்.ஐ.எம்., அதன் கூட்டணியான பாரதிய ட்ரைபல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார்.

அப்போது அவர், நாட்டில் இந்து தேசியவாதம் என்ற கொள்கை தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது. இதை எதிர்கொள்ள, நாங்கள் அரசியல் சாசனத்தைக் கையிலெடுப்போம். இந்து தேசியவாதத்திற்கு எதிர்த்து அரசியல் சாசனத்தைக் கொண்டு இந்திய தேசியவாதத்தை வளர்க்கப் பாடுபடுவோம்.

காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் அமைப்பைக் கண்டு அஞ்சுகின்றனர். ஆனால், ஏ.ஐ.எம்.ஐ.எம். தொண்டர்கள் கடவுளுக்கு மட்டுமே அஞ்சுவார்கள் எனக் கூறினார்.

குஜராத்தின் அகமதாபாத், சூரத், ராஜ்கோட், வதோதரா, ஜாம்நகர், பாவ்நகர் ஆகிய பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையும் படிங்க:உத்தரகாண்ட் வெள்ளம்: தொடர் மீட்பு பணியில் ராணுவம்; உலகத் தலைவர்கள் உதவிக்கரம்

ABOUT THE AUTHOR

...view details