தமிழ்நாடு

tamil nadu

Farm Laws : போராட்டத்தை உடனடியாக கைவிட முடியாது - வேளாண் சங்க தலைவர் ராகேஷ் திகாயத்

By

Published : Nov 19, 2021, 12:38 PM IST

நாடாளுமன்ற கூட்டத்தில் வேளாண் சட்டங்களை(Farm Laws) நீக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என வேளாண் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத்(Rakesh Tikait) தெரிவித்துள்ளார்.

Rakesh Tikait
Rakesh Tikait

விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மூன்று வேளாண் சட்டங்களை(Farm Laws) அரசு திரும்பப்பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அறிவித்தார்.

இம்மாத இறுதியில் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அரசு முறையாக சட்டத்தை திரும்பப்பெறும் நடவடிக்கையை மேற்கொள்ளும் எனக் கூறினார்.

டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் தங்கள் வீடு திரும்பி பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், போராட்டத்தை உடனடியாகக் கைவிட மாட்டோம் என பாரதிய கிசான் சங்கத்தின்(Bhartiya Kisan Union) தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத்(Rakesh Tikait) தெரிவித்துள்ளார்.

ராகேஷ் திகாயத் திட்டவட்டம்

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், போராட்டத்தை நாங்கள் திரும்பப் பெற மாட்டோம். நாடாளுமன்றத்தில் சட்டங்களை முழுமையாக திரும்பப்பெறும் நாள் வரை காத்திருப்போம். அடிப்படை ஆதார விலை மட்டுமல்லாது மற்ற விவசாய பிரச்னை குறித்தும் அரசு விவசாயிகளிடம் பேச வேண்டும் எனக் கூறியுள்ளார்.

பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் வேளாண் சட்டப் போராட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தாண்டு தொடக்கத்தில் பஞ்சாப், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடித் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இம்முடிவை எடுத்துள்ளது.

இதையும் படிங்க:'அரசின் 3 வேளாண்மை சீர்த்திருத்தங்களைவிட நிலச்சீர்த்திருத்தமே முக்கியம்...!'

ABOUT THE AUTHOR

...view details