தமிழ்நாடு

tamil nadu

பள்ளிகள் மூடல்  - 73 மாணவர்களுக்கு கரோனா தொற்று

By

Published : Sep 19, 2021, 5:56 PM IST

Updated : Sep 21, 2021, 7:46 PM IST

73 பள்ளி மாணவர்களுக்கு கரோனா தொற்று
73 பள்ளி மாணவர்களுக்கு கரோனா தொற்று

கர்நாடகா மாநிலத்தில் பள்ளிகள் திறப்பிற்குப் பின்னர், ஒரே மாவட்டத்தில் மொத்தம் 73 மாணவர்களுக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

துமகுரு: கர்நாடக மாநிலத்தில் கரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் முதல் கட்டமாக 9, 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதியும், ஆறு முதல் எட்டாம் வகுப்புகளுக்கு கடந்த செப்டம்பர் 6ஆம் தேதியும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில், துமகுரு மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா தொற்றுப் பரிசோதனையில், 73 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் 39 பேர் பெண் குழந்தைகள்.

அச்சத்தில் மாணவர்கள்

இதுகுறித்து மாவட்ட சுகாதார அலுவலர், டாக்டர். நாகேந்திரப்பா, "தொற்று கண்டறியப்பட்டுள்ள மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இதனால் பள்ளி மூடப்பட்டுள்ளது.

பள்ளிகளில் நோய்த்தொற்று யாரிடம் இருந்து பிற மாணவர்களுக்குப் பரவியது என்பதை அறிவது சற்று கடினம். இதனால், மாணவர்கள் பள்ளிக்கு வர அச்சப்படுவார்கள்" எனத் தெரிவித்தார்.

கரோனா தொற்று அச்சத்தால், கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி முதல் மாணவர்களின் வருகை சராசரியாக 55 விழுக்காடு தான் பதிவாகியுள்ளது.

அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் கூறியதாவது, "மாநில தொழில் நுட்ப ஆலோசனைக் குழுவிடம் அனுமதி பெற்ற பின்னரே மாநில அரசு பள்ளிகளைத் திறந்தது" என்றார்.

கேரளாவிலும் திறப்பு

இதுவரை, அம்மாநிலத்தில் மொத்தம் 29 லட்சத்து 67 ஆயிரத்து 83 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில், 15 ஆயிரத்து 755 பேர் தற்போது சிகிச்சையில் உள்ள நிலையில், நேற்று (செப். 18) தொற்றால் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேபோன்று, தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிகளுக்கு வந்து செல்லும் 160-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

மேலும், கரோனா தொற்று அதிகமாக உள்ள கேரளாவில், வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கேரளாவில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு?

Last Updated :Sep 21, 2021, 7:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details