தமிழ்நாடு

tamil nadu

கிரேன் கம்பி அறுந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

By

Published : Jul 29, 2022, 9:45 AM IST

தெலங்கானாவில் கிரேன் கம்பி அறுந்து விழுந்ததில் ஐந்து தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரேன் கம்பி அறுந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
கிரேன் கம்பி அறுந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

தெலங்கானாமாநிலம் நாகர்குர்னூல் மாவட்டம், கோலாப்பூர் மண்டலத்தில் உள்ள ரெகுமானா கடா பகுதியில் பாலமுரு திட்டப் பணி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை பணி தொடங்கியபோது, கிரேன் உதவியுடன் பம்ப் ஹவுஸில் இறங்கும் போது, அதனுடன் தொடர்புடைய கம்பி அறுந்து விழுந்தது.

இதில் அங்கிருந்த ஐந்து தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொருவர் பலத்த காயம் அடைந்தார். உயிரிழந்தவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கிரேன் கம்பி அறுந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு!கிரேன் கம்பி அறுந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

தொடர்ந்து இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க:கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்து

ABOUT THE AUTHOR

...view details