தமிழ்நாடு

tamil nadu

கர்நாடகாவில் குறைந்துவரும் கரோனா: 31,198 பேருக்கு உறுதி

By

Published : Jan 29, 2022, 8:38 AM IST

கர்நாடகாவில் நேற்று (ஜன.27) ஒரே நாளில் 31 ஆயிரத்து 198 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா தொற்று
கரோனா தொற்று

பெங்களூரு:கர்நாடகாவில் நேற்று (ஜன 28) மேலும் 31 ஆயிரத்து 198 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 37 லட்சத்து 23 ஆயிரத்து 694ஆக அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கி நிலையில் நேற்று சற்று குறைந்துள்ளது.

இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 71 ஆயிரத்து 92ஆக உள்ளது. மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 96 ஆயிரத்து 93ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று (ஜன 27) ஒரே நாளில் கரோனா தொற்றால் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 804 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 6.14 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் நேற்று (ஜன 28) மட்டும் 1 லட்சத்து 06 ஆயிரத்து 749 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் இன்று 20ஆவது மெகா தடுப்பூசி முகாம்

ABOUT THE AUTHOR

...view details