தமிழ்நாடு

tamil nadu

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இளைஞர் செய்த விபரீதச் செயல்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்! - Suicide in railway station

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 3, 2024, 10:10 PM IST

சிசிடிவி காட்சி (Credit - ETV Bharat Tamil)

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நான்காம் நடைமேடை தானாபூரில் இருந்து பெங்களூரு வரை செல்லும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் (Sanghamitra Superfast Express) ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் திடீரென நடைமேடையிலிருந்து இறங்கியுள்ளார். பின்னர், அவர் ரயில் நிலையத்திற்குள் வந்து கொண்டிருந்த ரயில் முன்பு விழுந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, உயிரிழந்த நபரின் உடலை மீட்ட ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? தற்கொலைக்கான காரணம் உள்ளிட்டவை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. எந்த பிரச்னைகளுக்கும் தற்கொலை தீர்வல்ல. சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் 104 என்கிற எண்ணுக்கு அழையுங்கள் அல்லது, சிநேகா உதவி எண்ணுக்கு (044-24640050) அழையுங்கள். 

ABOUT THE AUTHOR

...view details