தமிழ்நாடு

tamil nadu

சிதம்பரம் கோயிலில் குடும்பத்துடன் குடியரசு துணைத் தலைவர் சுவாமி தரிசனம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 7:57 PM IST

Vice President Swami darshan with family at chidambaram natarajar temple
சிதம்பரம் கோயிலில் குடும்பத்துடன் குடியரசு துணைத் தலைவர் சுவாமி தரிசனம்

Vice president swami dharshan at natrajar temple: இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிதம்பரம் நடராஜர் கோயிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.

கடலூர்:கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் உலகப் பிரசித்தி பெற்றதாகும். இந்நிலையில் இன்று (ஜன. 29)சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.

உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் மற்றும் பரங்கிப்பேட்டையில் உள்ள பாபாஜி கோயிலுக்கு இந்தியக் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், அவரது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று (ஜன. 29) மூன்று ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள இறங்குத் தளத்திற்கு காலை 9:30 மணி அளவில் வந்தார்.

பின்னர் கார் மூலம் நடராஜர் கோயிலுக்குச் சென்ற குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு கோயில் பொது தீட்சிதர்கள் சார்பில் கும்ப மரியாதை அளிக்கப்பட்டு, பின்னர் நடராஜர் முன்பு சுவாமி தரிசனம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து பரங்கிப்பேட்டைக்கு சென்ற குடியரசு துணைத் தலைவர் மீண்டும் அண்ணாமலை நகரில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட மூன்று ஹெலிகாப்டர் மூலம் குடும்பத்தினருடன் ஒரே நேரத்தில் புறப்பட்டு சென்றார்.

குடியரசு துணைத் தலைவர் வருகையையொட்டி தமிழக போலீஸ் ஐ.ஜி கண்ணன் தலைமையில் 7 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஐந்து அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்கு கொண்டு வந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: நாளை முதல் கிளாம்பாக்கம், மாதவரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குப் பேருந்து இயக்கம்; அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details