தமிழ்நாடு

tamil nadu

வி3 யூடியூப் சேனல் உரிமையாளர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..காரணம் என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 3, 2024, 12:54 PM IST

V3 ONLINE TV Vijayaraghavan: Myv3 Ads நிறுவனத்துக்கு சித்த மருத்துவ பொருட்கள் அனுப்புவது தொடர்பாக V3 சேனல் உரிமையாளர் விஜயராகவன் கைது செய்யப்பட்ட நிலையில், உடல்நிலை பிரச்னை காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

V3 online tv founder Vijayaraghavan
வி3 யூடியூப் சேனல் விஜயராகவன்

கோயம்புத்தூர்:கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த மை வி3 ஆட்ஸ் (Myv3 Ads) நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த வி3 யூடியூப் சேனல் (V3 ONLINE TV) உரிமையாளர் விஜயராகவன், மோசடி புகாரில், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாரால் கைது நேற்று (மார்ச் 2) செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் உடல்நிலை பிரச்னை காரணமாக மூன்றாவது முறையாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Myv3 Ads நிறுவனத்துக்கு சித்த மருத்துவ பொருட்கள் அனுப்புவது தொடர்பாக V3 சேனல் உரிமையாளர் விஜயராகவனிடம் போலீசார் நடத்திய விசாரணயில், அவர் போலி சான்றிதழ் வைத்துக்கொண்டு மருந்து தயாரித்து வருவது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து நேற்று மதுரையில் கைது செய்யப்பட்டார்.

மதுரையில் கைது செய்யப்பட்ட பொழுது நெஞ்சுவலி என்று கூறி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் விஜயராகவனுக்கு உடல் நிலையில் எந்த பிரச்னையும் இல்லை எனக் கூறியதால், போலீசார் அவரை கோவைக்கு அழைத்து வந்தனர்.

கோவையில் நேற்று போலீசார் விசாரணை மேற்கொண்டு இருந்த பொழுது, அவர் தனக்கு சர்க்கரை நோய் இருப்பதாக கூறியதைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், பரிசோதனையில் அவரது உடல் நலமாக இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட விஜயராகவன், தனக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாகவும், சர்க்கரை நோய் மற்றும் வெரிகோஸ் வெயின் பிரச்னைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து நள்ளிரவில் விஜயராகவனை மீண்டும் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:இப்படி ஒரு திருப்பு, அப்படி ஒரு திருப்பு.. உலக தோசை தினம் இன்று - தோசையின் வரலாறு தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details