தமிழ்நாடு

tamil nadu

மதுரவாயலில் கஞ்சா விற்பனை.. 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது! - College Students Selling Ganja

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 7, 2024, 7:52 PM IST

Ganja sales 2 college student arrest: மதுரவாயலில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் கைது செய்து, அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா, 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த ரூ.1.50 லட்சம் பணம் ஆகியவற்றை மதுரவாயல் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

three-people-including-two-college-students-arrested-for-selling-ganja-in-maduravoyal-chennai
மதுரவாயலில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் கைது!

சென்னை: மதுரவாயல் மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில், கல்லூரி மாணவர்களைக் குறி வைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக வந்த தகவலையடுத்து, மதுரவாயல் காவல் ஆய்வாளர் பூபதி ராஜ் தலைமையில், அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, மதுரவாயல் அடுத்த துண்டலம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அவர்களைக் கைது செய்த மதுரவாயல் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வரும் மதுரவாயல் அடுத்த துண்டலம், சன்னதி தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் (23), பிரசாந்த் (24) மற்றும் ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வரும் அசோக் (23) என்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, மூன்று பேரையும் கைது செய்த போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, மூன்று பேரும் சேர்ந்து கொண்டு திருத்தணியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து சிறு சிறு பொட்டலங்களாகப் பிரித்து பூந்தமல்லி, திருவேற்காடு, மதுரவாயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்களைக் குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமின்றி, பகுதி நேரமாக கல்லூரிக்குச் சென்று விட்டு வருவதும், முழு நேரமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள், கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த ரூ.1.50 லட்சம் பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மயிலாடுதுறையில் 5வது நாளாக சிறுத்தையை தேடும் பணி தீவிரம்.. வனத்துறையினரின் அடுத்தகட்ட நடவடிக்கை! - Leopard Movement In Mayiladuthurai

ABOUT THE AUTHOR

...view details