தமிழ்நாடு

tamil nadu

போதை ஸ்டாம்ப் விற்பனை செய்த நபருக்கு 12 ஆண்டுகள் சிறை - சென்னை நீதிமன்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 21, 2024, 11:06 PM IST

போதை தரக்கூடிய எல்.எஸ்.டி.(LSD) ஸ்டாம்ப்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

போதை ஸ்டாம்ப் விற்பனை
போதை ஸ்டாம்ப் விற்பனை

சென்னை:சென்னை ராயப்பேட்டை பகுதியில் போதை தரும் பொருளான எல்.எஸ்.டி. ஸ்டாம்ப் விற்பனை செய்யப்படுவதாக 2019ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்ட நேரத்தில் சென்னை மண்டல போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலின்படி, ஜனவரி ஒன்றாம் தேதி காலை 6 மணிக்கு சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ராயப்பேட்டையை சேர்ந்த அஷ்ரஃப் ஷெரீஃப் என்பவரிடமிருந்து 0.4 கிராம் அளவுடைய 20 எல்.எஸ்.டி. ஸ்டாம்ப்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை போதை பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சி.திருமகள் விசாரித்தார். அப்போது காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் அசோக் சக்ரவர்த்தி ஆஜராகி வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், வணிக அளவிலான ஸ்டாம்ப்களை வைத்திருந்தது காவல்துறை மூலம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அஷ்ரஃப் ஷெரீஃப்-க்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இதையும் படிங்க:முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வின் மகன் மீது வரதட்சனை புகார் - ஆவடி காவல் ஆணையரகத்தில் மருமகள் புகார்!

ABOUT THE AUTHOR

...view details